திருச்செங்கோடு பெரிய ஓங்காளியம்மன் கோவிலில் புதைந்திருந்த அம்மன் சிலை!
TIRUCHENGODE NEWS
திருச்செங்கோட்டில் 300 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த பெரிய ஓங்காளியம்மன் கோவில் உள்ளது, சமீபத்தில் கோவில் கட்டுமான பணியின் போது கர்ப்பகிரக மூலஸ்தானத்தில் கிரானைட் கற்கள் பதிக்க 3 அடி தோண்டியபோது மூலவர் சிலை அமைப்பிலேயே மண் சிலை கிடைத்துள்ளது.


இந்த சிலை 70 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணிலே புதைந்த சிலை என்று கருதுகிறார்கள். இந்த தகவல் கிடைத்ததும் திருச்செங்கோடு சுற்றுப்பகுதி பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

