திருச்செங்கோடு வரலாறு குழு

அறிமுகம்

உலகில் காலத்தால் பழமையானதாகவும், வரலாற்று சிறப்புடையதாகவும், இன்றளவும் மக்கள் வசிக்கக் கூடியதாகவும் உள்ள நகரங்கள் எண்ணிக்கை குறைவே. அத்தனை சிறப்புகளையும் உள்ளடக்கியதாகவும் மிகச்சிறந்த ஆன்மீகச் சிறப்பும் உள்ளதான நகரம் திருச்செங்கோடு ஆகும்.

இந்தியாவில் தொழிற்சிறப்பு மிக்க நகரங்களில் ஓன்றாக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகராக, அரிய புவியியல் அமைப்பை உடையதாக உள்ள இந்நகரத்தின் அத்தனை சிறப்புகளையும் அறிவதன் மூலம் தமிழக, இந்திய, உலக வரலாறுகள் கடந்து வந்த பாதைகளையும் அதன் மூலம் சமுதாயதிற்கான செய்திகளையும் அறிய முடியும். செய்திகளை ஆதாரங்களுடனும், நம்பிக்கைகள் அடிப்படையிலும் சொல்லப்படும்போது அதன் முக்கியத்துவத்தை உணரமுடியும்.

நினைத்தாலும், சென்றாலும், வசித்தாலும் முக்தி தரும் என்று ஆன்மீக உலகில் அறியப்படும் திருச்செங்கோடு நகரத்தைப் பற்றியும் அங்கு வாழ்ந்த மனிதர்கள், வாழ்க்கை முறை, ஆட்சிமுறை, தொழில்கள், பற்றி பின்வரும் “வரலாறு” பக்கங்களில் காணலாம்.

வலைத்தளம்

திருக்கோடிமாடச்செங்குன்றூர் நகரத்திற்கு மிகச் சிறந்த வரலாற்றுப் பின்னணி உண்டு, அர்த்தனாரீசுவரர் திருக்கோயிலில் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பூஜைகள் நடந்து வருகின்றன, இப்பவும் வைகாசி விசாகத் தேர் திருவிழாவின் போது மைசூர் அரண்மனையிலிருந்து வரவேண்டிய சீர் முறைகள் வந்து கொண்டிருக்கின்றன இதைப்போல் ஆயிரமாயிரம் தகவல்கள் உள்ளன. இப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாறுகளை கொண்டிருக்கும் நம்ம ஊரின் பெருமைகளை சொல்லவே இந்த வலைத்தளம்.

நோக்கம்

இதற்க்கு முன்பு நம்ம திருச்செங்கோட்டிற்க்கு பல இணையத்தளங்கள் இருந்தன ஆனால் அப்படி இருந்த இணையத்தளங்கள் முழுமையான தகவல்கள் இல்லாமலும், காலப் போக்கில் மேம்படுத்தாமல் இருந்த காரணத்தினாலும் இப்பொழுது வரை திருச்செங்கோட்டின் வரலாறுகளை சரியாக சொல்லும் ஒரு வலைத்தளங்கள் கூட இல்லை, அதனால் திருச்செங்கோடு சம்பந்தப்பட்ட வரலாற்று தகவல்களை செப்பு பட்டயங்கள், புத்தகங்கள். மற்றும் அரசு ஆவணங்கள் உதவியுடன் முடிந்தவரை களஆய்வு செய்து ஆதாரங்களுடன் சரியான தகவல்களை தெரியப்படுத்துவதே “திருச்செங்கோடு வரலாறு குழு” வலைத்தளத்தின் நோக்கம்.

விதிமுறைகள்

(காப்புரிமை, பிழைகள், தகவல் சரிபார்த்தல், ஆதாரங்கள்)

இந்த திருச்செங்கோடு வரலாறு குழு முழுக்க முழுக்க சேவையின் அடிப்படையில் இயங்க கூடிய குழு இதில் எந்த வணிக நோக்கமும் இல்லை இதில் பனி புரியும் அனைவரும் அவரவர் துறைகளில் பணிபுரிந்து கொண்டே இந்த வலைத்தளத்துக்காக அதீத நேரத்தையும், கடுமையான பணிகளையும் செய்தே இந்த வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதனால் இவ்வலைத்தளத்தில் உள்ள படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல், புகைப்படங்களை பயன்படுத்த கட்டாயம் ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும்.

அதே போல் இவ்வலைத்தள “செய்திகளில்” பயன்படுத்தபடும் புகைப்படங்களும் அனுமதி பெற்று அல்லது புகைப்பட நன்றி (Photo Credit) கொடுத்து பயன்படுத்தப்படும், அது காப்புரிமை கேட்கும் பட்சத்தில் இவ்வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும்.

இவ்வலைத்தளத்தில் பகிரப்படும் கட்டுரைகளில் தகவல் பிழைகள் இருக்கும் பட்சத்தில் எங்களின் கவனத்திற்கு நீங்கள் கொண்டு வரலாம்.

ஆதாரங்கள், தகவல் சேகரிப்பில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே அணைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது.

தொடர்புக்கு
tiruchengodehistorical@gmail.com