நகரம் பற்றி

திருச்செங்கோடு நகராட்சி, தமிழ்நாடு மாநிலம், நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மக்கள்தொகையில் இதுவே இம்மாவட்டத்தின் பெரிய நகராட்சி ஆகும். திருச்செங்கோடு நகரம் 33 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

13.03.1965ம் தேதிய உள்ளாட்சித்துறை அரசானை எண் 613 இன் படி 1.4.1965ம் தேதி முதல் நகராட்சி நிலையாக உயர்த்தப்பட்டது.

சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசானை எண். 498. நாள். 29.03.1984ன் படி இந்நகராட்சி முதல் நகராட்சி நிலையாக தரம் உயர்த்தப்பட்டது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசானை எண் 85 , நாள்.22.05.1998ன் படி இந்நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாக செயல் பட்டு வருகிறது.

திருச்செங்கோடு தொகுதியில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில், தேசத் தந்தை காந்தி, நேரு போன்ற தேசிய தலைவர்கள் வந்து சென்ற புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள காந்தி ஆசிரமம் தொகுதியில் உள்ளது.

இது தவிர, நிறைய பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் பெரும் அளவில் கவனம் பெற்று வருகின்றன.

திருச்செங்கோடு நகரமானது வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். 19ம் நூற்றாண்டில் இது ‘புலவர் சங்கம்’ என்னும் தமிழ் கலைக்கழகத்தின் இருப்பிடமாக திகழ்ந்துள்ளது.

அமைவிடம்

சாலை வழியாக

திருச்செங்கோடு ஈரோட்டிலிருந்து கிழக்கே 20 கிமீ தொலைவிலும்.

சேலத்திலிருந்து தெற்கே 45 கிமீ தொலைவிலும்

நாமக்கல்லிலிருந்து மேற்கே 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

  • ஈரோட்டையும்ஆத்தூரையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 79 இதன் வழியாக செல்லுகிறது.

  • திருச்செங்கோட்டையும் நாமக்கல்லையும் மாநில நெடுஞ்சாலை 94 இணைக்கிறது.

  • பரமத்தியையும், சங்ககிரியையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 86 இதன் வழியாக செல்லுகிறது.

ரயில்வே மூலம்

@ 20 ஈரோடு கி.மீ, @ நாமக்கல் 35 கி.மீ, @ சேலம் 45 கி.மீ

விமானம் மூலம்

திருசெங்கோடு அருகில் சேலம் விமானநிலையம் 50 கி.மீ, கோயம்புத்தூர் 114 கி.மீ , திருச்சி 132 கி.மீ.

வரைப்படம்

தொழில்

திருச்செங்கோடு ரிக் (ஆழ்துளை கிணறு வெட்டும்) தயாரிப்பு பிரதான தொழிலாகும். நாடு முழுவதும் 2,000க்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகள் போட இயக்கப்படும் ரிக் வண்டிகள் பெரும்பாலானவை திருச்செங்கோட்டை சேர்ந்தவை. இதுபோல் லாரித் தொழிலும் கணிசமான அளவில் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு 10,000க்கும் அதிகமான விசைத்தறிக் கூடங்கள், சைசிங்க் ஆலைகள், நூற்பு ஆலைகள், லாரி கூடு கட்டும் தொழில், விவசாயம் ஆகியவை அதிகளவில் உள்ளன.

உட்பட்ட பகுதிகள்

கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் திருச்செங்கோடு தொகுதியானது பரப்பளவில் பெரியதாக இருந்ததால் தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு, அதில் இருந்து குமாரபாளையம் என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.

திருச்செங்கோடு நகரம் 33 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு நகராட்சி, மல்லசமுத்திரம் பேரூராட்சி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியமும் வருகின்றன. இதற்கு உட்பட்ட பகுதியில் கருவேப்பம்பட்டி, ராஜாபாளையம், கருப்பகவுண்டம்பாளையம், திருமங்கலம், கருமாபுரம், கூத்தாநத்தம், செண்பகமாதேவி, பள்ளக்குழி அக்ரஹாரம், மங்கலம், சப்பயபுரம், மாமுண்டி அக்ரஹாரம், மல்லசமுத்திரம் மேற்கு, வரகூராம்பட்டி, புதுப்புளியம்பட்டி, சித்தளந்தூர், நல்லிபாளையம் மற்றும் மரப்பரை, தேவனாங்குறிச்சி என பல கிராமங்கள் உள்ளன.

மக்கள் தொகை

தொகுதியில் கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் பிரிவு மக்கள் கணிசமாக உள்ளனர். இதற்கடுத்தாற் போல் பட்டியலின மக்கள் கணிசமான அளவில் உள்ளனர்.

திருச்செங்கோடு 2024 மக்கள் தொகை

திருச்செங்கோடு நகராட்சியின் தற்போதைய மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 2024 இல் தோராயமாக 132,000 ஆகும். கோவிட் காரணமாக திருச்செங்கோடு நகரத்திற்கான 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு நகரத்திற்கான புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2024 இல் நடத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், அது முடிந்ததும் அது புதுப்பிக்கப்படும். திருச்செங்கோடு நகரத்தின் தற்போதைய தரவு மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளது ஆனால் 2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி.

திருச்செங்கோடு நகராட்சியின் மக்கள்தொகை 95,335 இதில் 47,810 ஆண்கள் மற்றும் 47,525 பெண்கள்.

0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 8901 ஆகும், இது திருச்செங்கோட்டின் (எம்) மொத்த மக்கள்தொகையில் 9.34% ஆகும். திருச்செங்கோடு நகராட்சியில், மாநில சராசரியான 996க்கு எதிராக பெண் பாலின விகிதம் 994 ஆக உள்ளது. மேலும் திருச்செங்கோட்டில் குழந்தை பாலின விகிதம் 980 ஆக உள்ளது. தமிழக மாநில சராசரியான 943. திருச்செங்கோடு நகரத்தின் எழுத்தறிவு விகிதம் மாநில சராசரியான 80.09 % ஐ விட 83.68 % அதிகமாக உள்ளது. திருச்செங்கோட்டில் ஆண்களின் கல்வியறிவு 89.66% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 77.67% ஆகவும் உள்ளது.

திருச்செங்கோடு நகரம் எதிர்கால மக்கள் தொகை 2021-2031

தேர்தல்கள்

திருச்செங்கோடு தொகுதியில், அதிமுக 7 முறை, காங்கிரஸ் இரு முறை, திமுக 3 முறை, மார்க்சிஸ்ட் மற்றும் தேமுதிக., ஆகியவை தலா ஒருமுறை, வென்றுள்ளன.