திருச்செங்கோடு மலை

TIRUCHENGODE HISTORY

ஆசிரியர்

6/27/2024

திருச்செங்கோடு மலையானது Pegmatoidal Granite (Pegmatite) என்னும் பாறை வகையை சேர்ந்தது Archean Proterozoic காலத்தில் உருவானது. Rb-Sr Isochrons data மூலமாக ஆய்வு செய்யப்பட்டதில் இம்மலைப்பாறைகளின் வயது 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவருகிறது இந்த S-வகை Granite பாறைகள் கண்டத்திட்டுகள் மோதலினால் உருவானதாகும்.

Reference: 1994 Geochemistry of Granite of Sankari, Tiruchengode, Natham, Krishna, Indian minerals (48) 113-122

கற்காலம்: கற்காலத்தின் முக்கிய சான்றுகளான முன்னோர் குழிகள் கோழிக்கால் நத்தம் குமாரமங்கலம், அணிமூர் பகுதிகளில் கண்டறியப்பட்டன, உலகப்பபாளையம் பள்ளி தமிழாசிரியர் தோட்டத்தில் சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

சங்க காலம் (கடைச்சங்க காலம்):

திருச்செங்கோடு, மழையும் அதனைச் சூழ்ந்து காடுகளும் உள்ள நிலப்பரப்பாக இருந்தது, திருச்செங்கோடு பகுதி அக்காலத்தில் கொங்கு நாடு என்ற அழைக்கப்பட்ட பகுதியில் இருந்தது.

சேரன் செங்குட்டுவன் காலத்தில் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் குன்றக்குரவை என்னும் பிரிவில்

சீர்கெழு செந்திலும் செங்கோடும்
வெண்குன்றும் ஏரகமும் நீங்கா
இறைவன் கை வேலனறே

என்று வேலன் வாழும் இடங்களாக குறித்துள்ளார்.

Related Stories